×

மழையால் பாதியில் நிறுத்தம்: குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு

திருச்சி, மே 4: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா இருங்களூர் கிராமத்தில் குடிசை மாற்று வாரியத்தின்கீழ் வீடுகள் வழங்கப்பட உள்ளதால் திருநங்கைகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசிப்பிடமின்றி தவிக்கும் திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, இருங்களூர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள திட்டம்-2ல் வீடுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியான திருநங்கை பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய விண்ணப்பப் படிவத்தினை திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் பெற்று மே 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளியின் பெயரில் வீடோ, நிலமோ இருக்க கூடாது. பயனாளிகள் பெயரில் எவ்வித குற்றவியல் நடவடிக்கை இருக்க கூடாது. குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.1,25,000ம் பணம் செலுத்த வேண்டும் (இத்தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடனாக பெற ஏற்பாடு செய்து தரப்படும்). விண்ணப்பங்கள் ‘மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு 0431 – 2413796 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

The post மழையால் பாதியில் நிறுத்தம்: குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Slum Replacement Board ,Tiruchi ,Shack Exchange Board ,Mannachanallur Taluk Irangalur ,Tiruchi District… ,Dinakaran ,
× RELATED திருச்சி எ.புதூரில் பைக் திருடன் கைது